28 ஆண்டுகள் கழித்து பல போராட்டங்களுக்கு பின் இன்று உலகளவில் வெளியாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2 பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லைகா இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது பார்ப்போம் வாங்க. சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் பிரியா பவானி ஷங்கர், ஜெகன் உடன் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்க வேண்டும் என போராடுகிறார்.
யூடுப் சேனல் மூலம் இதை நகைச்சுவையுடன் சேர்த்து செய்து வரும் சித்தார்த் ஒரு கட்டத்தில் நம்மால் எதுவுமே செய்ய முடியாது, இதற்கு இந்தியன் தாத்தா தான் வரவேண்டும் என முடிவு செய், இந்தியனை தேடும் பயணத்தில் இறங்குகின்றனர். கம் பாக் இந்தியன் என்கிற டேக்கை வைரலாக்கி இங்கு நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை இந்தியன் சேனாதிபதிக்கு தெரிவிக்கின்றனர்.
உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இந்தியனுக்கு இது தெரியவரும் என தொடர்ந்து முயற்சி செய்ய, தைவானில் இருக்கும் சேனாபதி மீண்டும் இந்தியா செல்ல வேண்டும் என முடிவு செய்கிறார். இந்தியாவிற்கு 28 ஆண்டுகள் கழித்து வரும் வீரசேகரன் சேனாபதியை பிடிக்க வேண்டும் என போலீஸ் ஒரு புறம் இருக்க, லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்க கூடாது என இந்தியா வரும் சேனாதிபதி என்னென்ன இன்னல்களை சந்தித்தார்? இதன்பின் நடக்கப்போவது என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர் கமல், சித்தார்த், நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தினை ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர். VFX காட்சிகளை மிரட்டலாக காட்டியுள்ளார் ஷங்கர். கமல் ஹாசன் - பாபி சிம்ஹா சேசிங் காட்சி, கிளைமாக்ஸ் சண்டை காட்சி, Prosthetic makeup என அனைத்தும் பக்காவாக செய்துள்ளனர். அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. முதல் பாகத்தில் ஏ.ஆர். ரஹ்மான் போட்டிருந்த பின்னணி இசையை கூட இரண்டாம் பாகத்தில் அனிருத் பயன்படுத்தியுள்ளார். இந்தியன் 2 நம்மை சிந்திக்க வைத்து, இந்தியன் 3யை எதிர்பார்க்க வைத்துள்ளது. தற்போது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேட்ப்பும் கிடைத்துள்ளது.
Listen News!