• Aug 24 2026

மீடியா சந்திப்பை புறக்கணித்த ரன்வீர் சிங்.. யாரைப் பார்த்து பயப்படுகின்றார்.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங், சமீபத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் குறிப்பிடத்தக்க சாதனையை படைத்ததாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் பர்ஹான் அக்தர் இயக்கத்தில் உருவாகவிருந்த 'டான் 3' திரைப்படத்தில் ரன்வீர் சிங் நடிக்கவிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவர் அந்தப் படத்திலிருந்து விலகியதாக வெளியான தகவல்கள் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.


இந்த நிலையில், ரன்வீர் சிங்கை பற்றிய புதிய தகவல் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, அவர் தனது அடுத்த படமான 'பிரளய்' வெளியாகும் வரை சுமார் 18 மாதங்களுக்கு ஊடக நேர்காணல்கள் மற்றும் பொது விளம்பர நிகழ்ச்சிகளைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

தனது படைப்புகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 'டான் 3' திரைப்படத்திலிருந்து விலகிய விவகாரம் மற்றும் தயாரிப்பாளர்-இயக்குநர் பர்ஹான் அக்தருடன் ஏற்பட்டதாக கூறப்படும் கருத்து வேறுபாடுகளும் இந்த முடிவுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement