தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், “கனா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தர்ஷன் தனது புதிய படமான “ஹவுஸ்மேட்ஸ்” மூலமாக மீண்டும் திரையரங்கிற்கு வந்துள்ளார். இயக்குநர் ராஜா வேல் இயக்கியிருக்கும் இந்த படத்தில், அர்ஷா சாந்தினி, காளி வெங்கட், வினோதினி, மற்றும் தீனா உள்ளிட்ட திறமையான நடிகர்களும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில், தர்ஷன் ஒரு சாதாரண இளைஞனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம், நேற்று (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியிடப்பட்டு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் ஹவுஸ்மேட்ஸ் படம் 60 லட்சம் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இனி வரும் நாட்களில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!