இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.
இப்படத்தினைத் தொடர்ந்து ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராகவும் வலம் வருகின்றார். அத்தோடு கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்ற ஏ.ஆர் ரகுமான் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றார்.
கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தான் இசையமைத்த அனைத்து பாடல்களையும் ஹிட் பாடல்களாக கொடுத்து வரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அவரின் இசைக்காக மட்டுமல்லாமல் அவரின் குணத்திற்காகவும் அவரை ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.
அத்தோடு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் 1995-ல் சாய்ரா பானுவை திருமணம் முடித்தார். இந்த தம்பதியினருக்கு கதிஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் மூத்த மகள் கதிஜாவின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
மணமகன் ரியாசுதீன் ஷேக் முகமது, ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இஞ்ஜினியராக பணியாற்றியவர்.மேலும் ஏ.ஆர். ரகுமான் தனது சமூக வலைதள பக்கங்களில், 'எல்லாம் வல்ல இறைவன் மணமக்களை ஆசிர்வதிக்கட்டும். உங்கள் வாழ்த்துகளுக்கும், அன்புக்கும் நன்றியை முன்னரே தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மகள் கதிஜா, மருமகன் ரியாசுதீன் மற்றும் குடும்பத்தினருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஏ.ஆர்.ரகுமான் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்த சந்திப்பின்போது, ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் இதுதொடர்பான புகைப்படத்தை முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பிறசெய்திகள்:
- நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு நாள் குறிச்சாச்சு- எந்த கோயிலில் திருமணம் தெரியுமா?
- Kgf2 திரைப்படத்தின் முக்கிய நடிகர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்
- AK61 திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- படத்திற்காக இது உருவாக்கப்பட்டதா?
- மீண்டும் தேசிய விருதுக்கு தயாரான கீர்த்தி சுரேஷ்- சாணிக்காயிதம் படத்தை பார்த்து பாராட்டி வரும் ரசிகர்கள்
- சினிமாவில் உள்ள இரண்டு ‘டான்’ களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்-புகழ்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்
- அட்டைப் படத்திற்காக எல்லை மீறி போஸ் கொடுத்த நடிகை சமந்தா- குவியும் லைக்குகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!