• Apr 18 2026

லோகேஷ் கனகராஜ் தலையை வெட்டினாலும் கிளாமர் குறையலையே.. காயத்ரி சங்கரின் போட்டோஷூட்..

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை காயத்ரி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் ’விக்ரம்’ படத்தில் உன்னுடைய தலையை லோகேஷ் கனகராஜ் வெட்டினாலும் கூட கிளாமர் குறையவில்லையே என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. 

நடிகை காயத்ரி ’18 வயசு’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் மட்டும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ’ரம்மி’ ’புரியாத புதிர்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’சீதக்காதி’ ’சூப்பர் டீலக்ஸ்’ ’துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இந்த நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தில் அவர் பகத் பாசில் ஜோடியாக நடித்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியின் ’மாமனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் நடிகை காயத்ரி சங்கர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நிலையில் அவரை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் தனது ஃபாலோயர்களை மகிழ்வித்து வரும் காயத்ரி சங்கர் சற்றுமுன் பதிவு செய்துள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

இந்த புகைப்படங்களுக்கு லோகேஷ் கனகராஜ் உன் தலையை வெட்டிய போதிலும் கிளாமர் மட்டும் குறையவில்லையே என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.




Advertisement

Advertisement