’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இரண்டு மருமகளான மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் தங்களது மாமியாரை மாமா என கூறி ஓட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நேற்று தங்கமயில் மற்றும் சரவணன் உரையாடல் குறித்த காட்சிகள் இருந்தது என்பதும் இறுதியில் ’உங்களை மாமா என கூப்பிடலாமா மாமா’ என்று தங்கமயில் கூறியதை பாண்டியன் குடும்பத்தில் உள்ள அனைவரும் கேட்டு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பதை பார்ப்போம்.
இதனை அடுத்து மீனா தனது கணவரை மாமா என கூப்பிட, மீனா கணவர் தயவு செய்து மாமா என்று கூப்பிடாதே நல்லாவே இல்லை என்று சொல்லும் காட்சிகள் உள்ளன. இதனை அடுத்து கிச்சனில் மீனா, ராஜி ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் மாமா என்னை கூப்பிட்டு கொண்டு சரவணனை கேலி செய்ய, அப்போது அங்கு வரும் கோமதி,’என்ன என் பிள்ளையை இரண்டு பேரும் சேர்ந்து கேலி செய்கிறீர்களா? என்று கூறுகிறார். அப்போது இரண்டு மருமகள்களும் மாமியாரையும் மாமா என கூப்பிட்ட நிலையில் அங்கு ஒரு காமெடி கலாட்டாவே நடக்கிறது.

அதன் பிறகு தனது மூத்த மருமகள் தங்க மயிலுக்கு ஆதரவாக கோமதி பேச, மூத்த மருமகள் வீட்டுக்கு வருவதற்கு முன்பே நீங்கள் அவர் பக்கம் நீங்கள் சாய்கிறீர்கள், அப்படி என்றால் எங்கள் நிலை என்ன என்று மீனாவும் ராஜியும் கூற ’அப்படி எல்லாம் இல்லை, எனக்கு மூன்று மருமகளும் ஒரே மாதிரி தான் என்று கூறி சமாளிக்கிறார்.
இந்த நிலையில் மொட்டை மாடியில் சரவணன் லவ் சாங்ஸ்களை போட்டு ஜாலியாக படுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு வரும் மற்ற 2 சகோதரர்களும், கோமதியின் தம்பியும் அவரை கேலி செய்கின்றனர். இப்படியான ஜாலியான காட்சிகள் பாண்டியன் குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தங்கமயில் குடும்பத்தில் தங்க மயிலும் அவரது தங்கையும் சரவணன் குறித்து பேசுகின்றனர். பார்க்க நன்றாகத்தான் இருக்கிறார்,
சரவணன் பழகுவதற்கு நன்றாகத்தான் இருக்கிறார், அனேகமாக எங்கள் இரண்டு பேருக்கும் ஒத்துவரும் என்று தங்கமயில் கூற, அதை அவருடைய தங்கையும் ஆதரிக்கிறார். மொத்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதை பாசிட்டிவாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து ஏதாவது திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!