• May 19 2024

பள்ளிக்கால நயன்தாராவை பார்த்திருக்கிறீர்களா..? அவரின் பள்ளி இதுதானா..? வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்றாலே அது நம்ம நயன்தாரா தான். இவர் 2003-ஆம் ஆண்டு 'மனசினகாரே' என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமாகியிருந்தார். எனினும் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் இவருக்கான அறிமுகத்தைக் கொடுத்திருந்தது 2005-ஆம் ஆண்டில் சரத்குமாரின் நடிப்பில் வெளியாகியிருந்த 'ஐயா' என்ற படமே.

இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருந்தது. எனினும் இவர் சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தான் அதிகளவில் நடித்து வருகின்றார். அதுமட்டுமல்லாது இவர் நடிப்பில் தற்போது 'கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான்' ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இவ்வாறாக படங்களில் தனது திறமையை நிலை நாட்டி வருகின்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் என்பவரை 7 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார். இவர்கள் இருவரினதும் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பெரிதும் வைரலாகி வந்தமை குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி இவர்களது தாய்லாந்து ஹனிமூன் போட்டோக்களும் வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா படித்த பள்ளியின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது நயன்தாரா தனது சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருவல்லா என்ற இடத்தில் இருக்கும் O.E.M பப்ளிக் பள்ளியில் தான் படித்திருக்கின்றார்.

இந்நிலையில் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அந்தப் பள்ளியில் தனக்கு பிடித்த முக்கிய நபரான தலைமை ஆசிரியருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement