• May 20 2024

பிசாசு 2 பட நடிகை பிசாசாக மாறி விட்டாரா..? வெளியாகிய கவர்ச்சிப் புகைப்படங்கள்…கலாய்க்கும் ரசிகர்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் இளம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட நட்சத்திர நாயகிகளில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஆரம்பகாலங்களில் ஒரு பாடகியாகவே ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகையாக காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இவரின் கவர்ச்சியான அழகிற்கும், திறமையான நடிப்பிற்கும் மயங்காத ரசிகர்களே இல்லை என்று தான் கூற முடியும். அத்தோடு இவர் அடிக்கடி கிசு கிசு சர்ச்சைகளில் சிக்கி வருகின்ற ஒரு நடிகையும் கூட.

நடிகை ஆண்ட்ரியா 'மங்காத்தா', 'விஸ்வரூபம்', 'அரண்மனை', 'தரமணி', 'வடசென்னை' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கின்றார். இவர் நடித்த படங்களில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்கள் இவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்த்தின.

இவ்வாறாக பல படங்களில் நடித்து வெற்றிக் கொடி நாட்டி வந்த நடிகை ஆண்ட்ரியா தற்போது 'பிசாசு 2' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறாக பல படங்களில் ஓய்வில்லாமல் பிஸியாக நடித்து வருகின்ற ஆண்ட்ரியா போட்டோ ஷூட் நடத்துவதிலும் அதிகளவு ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகுவது வழமை.

இந்த நிலையில் இவர் தற்போது கறுப்பு நிற உடை அணிந்து கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "அடடே பிசாசு பட நடிகை உண்மையிலும் பிசாசாக மாறி விட்டாரா?" என செல்லமாக நம்ம ஆண்ட்ரியாவைக் கலாய்த்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement