தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரை உலகில் ஏராளமான நடிகர்கள் சொந்த படம் எடுத்து தாங்கள் பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த பணத்தை ஒரே படத்தில் இழந்து இருக்கிறார்கள் என்பதும் அதன் பிறகு திரை உலகில் இருந்து காணாமல் போனவர்கள் பலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் மட்டுமின்றி ஒரு சில தொழில்நுட்ப கலைஞர்களும் சொந்த படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டார்கள் என்பதும் எனவே சொந்த படம் எடுப்பது என்ற ரிஸ்கை யாரும் எடுக்க வேண்டாம் என நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விவரமானவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என்ற நிலையில் ஏராளமாக வருமானம் பார்த்திருக்கும் ஜிவி பிரகாஷ் தற்போது தனது சக்திக்கு மீறி ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ’கிங்ஸ்டன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிக்காக மட்டுமே பல கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல் முறையாக கடலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஹாரர் படமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான படமாக இது இருக்கும் என்றும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் வெற்றி பெற்றால் அல்லது குறைந்தபட்சம் மீடியமாக ஓடினால் கூட ஜிவி பிரகாஷ் தப்பித்து விடுவார் என்றும் ஆனால் தோல்வி அடைந்தால் ஜி வி பிரகாஷ் பொருளாதார அளவில் மிகப்பெரிய சிக்கலில் சிக்குவார் என்றும் கோலிவுட் திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!