• Oct 05 2024

பிரிந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி மீண்டும் இணைந்தனர்.. வெற்றிமாறன் செய்த மாயாஜாலம்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் திரையுலகில் சில பிரபலங்கள் விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து செய்தியை ரசிகர்கள் நம்பவே முடியாமல் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரையும் வெற்றிமாறன் இணைத்து வைத்துள்ளதாக வெளியாகி உள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிமாறன் தயாரிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’சார்’. விமல் மற்றும் சாயாதேவி நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. சித்து இசையமைத்த இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிங்கிள் பாடல் அறிவிப்பில் தான் ஒரு ஆச்சரியம் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. ஏனெனில் இந்த பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிவு அறிவிப்புக்கு முன் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதா? அல்லது அதன் பின்னர் ஒலிப்பதிவு செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை என்றாலும் வெற்றிமாறன் படத்திற்காக மீண்டும் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர் என்பது ஆச்சரியமான தகவல் தான்.

ஒரு பாடலில் இணைந்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி மீண்டும் வாழ்க்கையில் இணைவார்களா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


Advertisement

Advertisement