• Sep 20 2024

ஜிவி பிரகாஷின் 25வது படம் இரண்டு பாகமா? இந்த படமாவது தேறுமா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவர் 25வது படம் என்ற மைல் கல்லையும் தொட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளராக 100வது படத்தை ஜிவி பிரகாஷ் நெருங்கியுள்ள நிலையில் நடிகராகவும் அவர் 25 வது படத்தை தொட்டுவிட்டார் என்பதும் அவரது 25 வது படம் 'கிங்ஸ்டன்’ என்றும் கூறப்படுகிறது. இந்த படம் ஹாலிவுட் வெளியான ’ஹாரிபாட்டர்’ பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது  என்றும் இந்த படத்தை முடித்தவுடன் போட்டு பார்த்ததில் நீளம் அதிகமாக இருந்ததால் இந்த படத்தை இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் பாகத்தை வெளியிட இருப்பதாகவும் அதன் பின்னர் இரண்டே மாதங்களில் அடுத்த பாகத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.



ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்யபாரதி நடித்துள்ள இந்த படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி என பான் இந்திய படமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கமல் பிரகாஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் அந்தோணி, சேட்டன், குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் இந்த படமாவது அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement