• May 19 2024

மருத்துவமனையில் குணசேகரன்... அலறித் துடிக்கும் குடும்பம்... ஜீவானந்தம் கைப்பற்றிய மற்றொரு சொத்து.. இனி நடக்கப் போவது என்ன..? 'எதிர்நீச்சல்' எபிசோட்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் குணசேகரன் ரூமிலிருந்து அனைவரையும் கிளம்புமாறு கூறிவிட்டு கதிரையும் கரிகாலனையும் மட்டும் இரண்டு பக்கமும் காவலுக்காக உட்கார சொல்கிறார். பின்னர் "அந்த ஜீவானந்தம் வந்தால் உள்ளே விட வேண்டாம், அப்படி அவன் மீறி வந்தால் அவனிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி விடுங்கள்" என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிப் புலம்புகின்றார் குணசேகரன். பின்னர் கதிரும் கரிகாலனும் குணசேகரனை படுக்க வைத்து மாத்திரை கொடுத்து நிம்மதியாக தூங்க வைக்கிறார்கள். 


மறுநாள் காலை விடிந்ததும் குணசேகரன், கதிர் மற்றும் கரிகாலன் ஆகிய மூவரும் ஏதோ பேசி கொண்டு இருக்கிறார்கள். மறுபுறம் ஈஸ்வரியும் ரேணுகாவும் சமையல் வேலையை பார்த்து கொண்டு இருக்க நந்தினி மட்டும் ஏதோ பலத்த யோசனையில் ஆழ்ந்து இருக்கிறாள். அதை அவதானித்த ரேணுகா நந்தினியிடம் "என்னடி ஆச்சு?" என கேட்க அதற்கு நந்தினி "நேத்து மூத்தவர் செய்த கூத்தை நினைத்து எனக்கு அடிவயிற்றில் இருந்து சிரிப்பு சிரிப்பாக வந்தது" என சொல்லி சொல்லி அடக்கமுடியாமல் சிரிக்கிறார் நந்தினி. 

பதிலுக்கு ஈஸ்வரி "அவர் மிகவும் மோசமான ஆள் தான் என்பது நமக்கு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இது சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல. அந்த ஜீவானந்தத்தை எப்படி எதிர்க்கிறது என்பது பற்றி மட்டும் யோசி" என்கிறார். அந்த சமயத்தில் ஆடிட்டர் வீட்டுக்கு வருகிறார். நேராக மாடியில் இருக்கும் குணசேகரனை சந்திக்க செல்கிறார். ஆடிட்டரை கண்டதும் ஏதாவது முக்கியமான விஷயமாக தான் இருக்கும் எனக் கூறி நந்தினி, ரேணுகா, ஜனனி ஆகியோரும் மாடிக்கு செல்கிறார்கள். 


ஆடிட்டரிடம் குணசேகரன் "உங்க முழியே சரியில்லை என்ன விஷயம் சொல்ல வந்தீங்களோ அதை சீக்கிரம் சொல்லுங்க" என கேட்கிறார். அதற்கு ஆடிட்டர் 40% ஷேர்... என சொல்லி இழுக்கிறார். பதிலுக்கு குணசேகரன் "என்ன அந்த லிஸ்ட்ல வேற என்னத்த சேர்த்துக்கொண்டான். திண்டுக்கல் பேக்ட்ரியா" என கேட்கிறார். அதற்கு ஆடிட்டர் "இல்ல சார் அந்த வீடு... "என மீண்டும் இழுக்கிறார். உடனே குணசேகரன் எது அந்த பழைய வீடா? என கேட்க இல்ல சார் இந்த வீடு... என ஆடிட்டர் சொன்னதும் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே சரிந்து விழுந்து விடுகிறார் குணசேகரன்.


குணசேகரன் நிலமையைப் பார்த்த அனைவரும் கத்திக் கதறுகிறார்கள். பின்னர் கதிர் குணசேகரனை தூக்கி தோள் மேல் போட்டுக் கொண்டு செல்கிறார். அதனைப் பார்த்துப் பயந்த அனைவரும் பார்த்து மெதுவா செய் என்றாலும் கேட்காமல் அவரை கரிகாலன் உதவியோடு தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சொல்வதற்காக கீழே வந்து பார்த்தால் அங்கு கார் எதுவும் இல்லை. 

பின்னர் கதிருக்கு ஆட்டோவும் கிடைக்காததால் சக்தி தன்னுடைய பைக்கில் கூட்டி செல்கிறேன் என எடுத்து வர அவனிடம் இருந்து சாவியை பிடுங்கி கதிரே பைக்கை எடுத்து வந்து குணசேகரனை நடுவில் உட்கார வைத்து கரிகாலனை பின்னாடி வைத்து அழைத்து செல்கிறார். அவர்கள் போகும் வழி எல்லாம் குணசேகரன் தலை தொங்கிய படி மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார். 

மறுபுறம் "நான் இருக்கேன் அண்ணன் நீங்க பயப்படாதீங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாது" என கதிர் ஒரு பக்கம் ஆறுதல் வார்த்தை கூற கரிகாலனும் அவருக்கு நம்பிக்கை கொடுத்த வண்ணம் செல்கின்றார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணசேகரனுக்கு அவசர அவசரமாக அவருக்கு முதல் உதவி செய்கிறார்கள் மருத்துவர்கள். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement