• May 18 2024

கரிகாலன் ஒவ்வொரு நாளும் இதைப் பண்ணிட்டே இருப்பான்- உண்மையை போட்டுடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

stella / 9 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சுவாரஸியத்திற்கு பஞ்சம இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியலாகவும் இது அமைந்துள்ளது.

இயக்குநர் திருச்செல்வம் இயக்கிவரும் இந்த தொடரில் கடந்த சில வாரங்களாக கரிகாலன் கதாபாத்திரம் மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. காரணம் அவருக்கும் ஆதிரைக்கு நடந்த திருமணம் குறித்து பேசுகிறார்கள்.


இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கமலேஷ் அவர்களின் மகள் பிறந்தநாள் விழா அண்மையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

அப்போது ஆதி குணசேகர் அவர்களிடம் கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விமல் குறித்து கேட்டபோது, கரிகாலன் தினசரி வாழ்க்கையில் நிறைய புத்தகங்களை படிப்பவர், அது மட்டும் இல்லாமல் அவர் எழுத்தாளரும் தான் என கூறியுள்ளார்.சீரியலில் அப்பாவி மாதிரி நடிக்கும் இவருக்குள் இப்டியொரு திறமை இருக்கா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement