• May 19 2024

பிரமாண்டமாக நடந்த உமாபதி-ஐஸ்வர்யா திருமண நிச்சயதார்த்தம்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அர்ஜுன். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக வலம் வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடிக்கிறார். இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில்  அண்மையில் இவருக்கு  திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியோடுதான் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவலகள் பரவி வந்தன. இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இப்போது பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள் என்றும் கூறப்பட்டது.


இந்நிலையில் தற்பொழுது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அத்தோடு இத்தம்பதியினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement