• May 07 2024

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு- டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தில்  நடிகை பார்வதி விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் மாளவிகா மோகனன்,பசுபதி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இப்படம்,தங்கம் எடுக்கும் தொழிலாளர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக உடல் எடையை பாதியாக குறைத்து, நடித்துள்ளார் . மேலும் இப்படத்தின் ஸ்டாண்ட் காட்சியில் நடித்த போது, விக்ரம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் விலா எலும்பு முறிந்து சில மாத ஓய்வுக்கு பின்னர் மீண்டும் இப்படத்தில் நடித்தார்.


இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள், பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டது.

தங்கலான் படத்தில் ரிலீஸ் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், சற்று முன்னர், 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதியுடன்... டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 


அதன்படி தங்கலான் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement