• May 20 2024

பிக் பாஸுக்கு சென்ற Gp முத்துவின் மனைவி அளித்த நெகிழ்ச்சியான பேட்டி-என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

‘என் கணவர் யாரிடமும் சண்டை போட மாட்டார்’ என்று ஜிபி முத்துவின் மனைவி அஜிதா அளித்திருக்கும் பேட்டி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முன்தினம்  விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மேலும் இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. அதாவது, இந்த நிகழ்ச்சி தினமும் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும்.

இதன் பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என  20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது, நிகழ்ச்சி ஆரம்பத்திலே பிக் பாஸ் 20 போட்டியாளர்களை களம் இறங்கி இருக்கின்றது. அத்தோடு நேற்று முன்தினம் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் குறித்து கூறப்பட்டு இருந்தது.மேலும்  இந்த முறையும் பலர் புதிய முகங்களாக இருக்கின்றனர். றேந்று முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கி விட்டது. போட்டியாளர்கள் எல்லோருமே தங்களை பற்றி அறிமுகம் செய்து கொண்டு வழக்கம்போல் முதல் நாளில் ஜாலியாகவும் அன்போடும், பாசத்தோடும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் டிக் டாக் நாயகன் ஜிபி முத்து கலந்து கொண்டிருக்கிறார். இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சோசியல் மீடியாவில் மிகப் பிரபலமானவர். அதோடு இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான். டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், youtube என வீடியோ தளங்கள் எந்த பக்கம் சென்றாலும் ஜிபி முத்துவின் வீடியோவை பார்க்க முடியும். இதனால் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களின் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் இவர் நெல்லை தமிழில் தன்னை கிண்டல் செய்யும் நபர்களை திட்டக்கூடிய வார்த்தைகளும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் விதமாக இருக்கிறது. இவ்வாறுஇருக்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஜிபி முத்துவை வழியனுப்ப அவரது குடும்பத்தினர் வந்திருந்தார்கள். அப்போது ஜி பி முத்துவின் மனைவி அஜிதா தெரிவித்ததாவது, குழந்தை, குடும்பம் என்று ஒருபோதும் பிரிந்ததில்லை. அவர் நூறு நாட்கள் தனியாக அதுவும் தொலைபேசியில் கூட பேச முடியாது என்பது தான் கொஞ்சம் கவலையாக  இருக்கிறது. இருந்தாலும், அவர் இலக்கை நோக்கி வெற்றி அடைய வேண்டும். பிக்பாஸில் யாரிடமும் சண்டை போடக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.


Advertisement

Advertisement