• Jan 15 2025

பாக்கியா வீடு தேடிவந்த கோபி..செழியன் செய்த காரியம்! ஈஸ்வரி சொன்ன வார்த்தை

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா செய்ததை எண்ணி பாக்கியா அழுது கொண்டு இருக்க எல்லோரும் சமாதானம் செய்கின்றார்கள். ஈஸ்வரி இதுக்கெல்லாம் காரணம் செழியன் தான் நீ அப்பவே சொல்லி இருக்கலாம் என சொல்ல, அவர் எனக்கு எப்படி தெரியும் நான் அவளுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன் என சொல்கின்றார்.

அதன் பின்பு ராதிகா வீட்டிற்கு வந்த கோபி என் பொண்ணு இனியாவுக்கு என்ன நடந்தது என்று கேட்க, ராதிகா எதுவும் சொல்லாமல் மையூவுடன் தூங்க சென்று விடுகிறார்.

இதனால் இனியாவுக்கு போன் பண்ணி கோபி அவர் போன் எடுக்கவில்லை என்றதும் நேராக வீட்டுக்கு செல்கின்றார். அங்கு சென்று செழியனுக்கு போன் பண்ண, செழியன் கீழே வந்து நடந்தவற்றை சொல்லுகின்றார்.

இதை தொடர்ந்து இனியா பாவம். அவ பயந்து போய் இருப்பா. அவளை பாக்கணும் போல இருக்குது என்று சொல்ல, இப்பதான் பிரச்சனை எல்லாம் முடிஞ்சு தூங்குறா என்று செழியன் சொல்லிச் செல்கின்றார்.


அதன் பின்பு வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவுடன் பேசவேணும் என  மீண்டும் கதவைத் தட்ட அவர் கதவை திறக்கவில்லை. என்ன இருந்தாலும் நம்ம பொண்ணுக்கு ஒன்னுனா ராதிகா சும்மா இருக்க மாட்டா என சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மறுநாள் காலையிலும் இனியா அழுது கொண்டிருக்க பாக்கியா வந்தவுடன் தூங்குவது போல இருக்க, பாக்கியா இனியாவின் தலையை தடவ உடனே எழுந்த இனியா பாக்கியாவை கட்டிப்பிடித்து அழுகின்றார்.

மேலும் இப்படி செய்ய மாட்டேன் என்று சொல்லி அழுது புலம்புகின்றார். அதற்கு அட்வைஸ் கொடுக்கின்றார் பாக்கியா இதுதான் இன்றைய எபிசோடு.

Advertisement

Advertisement