நடிகர் சிவகார்த்திகேயன் டிவியில் ஆங்கராக இருந்து தனது திறமையை வளர்த்து கொண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மாவீரன், டாக்டர், அமரன் என பல ஹிட் படங்களை கொடுத்தார். ஒவ்வொரு படத்திலும் தன்னை வித்தியாசமாக காட்டி எல்லா ஜோனரிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை காட்டினார்.
இவர் இப்படி ஒருபுறம் வளர்ந்து கொண்டு இருக்க இவருடன் சமகாலத்தில் டிவியில் நிகழ்ச்சிக்கு வந்தவர் கோகுல். கலக்கப்போவது யாரு சீசனில் இருவரும் கலக்கியவர்கள் தான்,கின்னஸ் சாதனைகள் படைத்தவர். சில படங்களில் நடித்த இவர் சிறந்த நடனக்கலைஞர். அது மட்டுமல்லாமல் மைம் கலைஞர் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.
d_i_a
நிறைய பேர் கமண்ட்ல சொல்வாங்க. நீங்களும் சிவகார்த்திகேயன் மாதிரி வந்து இருக்கணும்னு. நானும் விவரம் தெரியாத வயசுல நம்மகூட தான் வந்தாரு. அவரு மாஸ் ஹீரோ ஆகிட்டாரு. நாம அப்படியே இருக்கோம்னு ஃபீல் பண்ணிருக்கேன். ஆனா, அவருக்கான டைம் வந்திருக்கு. நமக்கு வரல. அது வரும்னு நினைக்கிறேன். இன்னிக்கு ஜி.பி.முத்து எல்லாம் பேமஸ். அதனால அவருக்கு வாய்ப்பு வரும். திறமை எல்லாம் அடுத்து தான் என்று மனம் உடைந்து பேசியுள்ளார் கோகுல் நாத்.
Listen News!