தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் வெளிவந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
’கோட்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’விசில் போடு’ என்ற பாடல் சுமாராக இருந்தது என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து இரண்டாவது பாடலான பவதாரணி பாடிய பாடல் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று வெளியான மூன்றாவது பாடல் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டு வருகிறது.
சின்ன குழந்தைகளுக்கு எழுதிய ரைம்ஸ் போல பாடல் இருக்கிறது என்றும் குறிப்பாக பாடலில் வரும் டிஏஜிங் டெக்னாலஜி காட்சி மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் விமர்சனங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.
யுவன் சங்கர் ராஜா பீல்ட் அவுட் ஆன மியூசிக் டைரக்டர் என்றும் உண்மையிலேயே அவர்தான் மியூசிக் போட்டாரா? அல்லது வெங்கட் பிரபு, பிரேம்ஜியை மியூசிக் போட வைத்துவிட்டு யுவன் பெயரை பயன்படுத்தினாரா என்று தெரியவில்லை என்றும் பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தத்தில் விஜய் படம் என்றாலே பாடல்கள் சூப்பராக இருக்கும் என்று ’வாரிசு’ ’லியோ’ படம் வரை பெயர் வாங்கிய நிலையில் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் பாடல்களை சொதப்பிவிட்டார் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
டீஏஜிங் டெக்னாலஜியை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி அனிமேஷன் மாதிரி மிகவும் கேவலமாக படத்தை வெங்கட் பிரபு எடுத்து வைத்திருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. மொத்தத்தில் ’கோட்’ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!