தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை ஏற்கனவே 93 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனையாகி விட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை முதலில் சன் டிவி வாங்கி இருந்த நிலையில் அதன் பின்னர் சன் டிவி படத்தை திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்பட்டது. அதேபோல் கலைஞர் டிவி இந்த படத்தை வாங்க விரும்பவில்லை என்றும் விஜய் டிவி மிகவும் குறைந்த விலைக்கு கேட்டதால் தயாரிப்பு தரப்பு இந்த படத்தை அந்த டிவிக்கு கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து தற்போது தளபதி விஜய் மானத்தை காப்பாற்றி உள்ளது ஜீ டிவி தான் என்று தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அர்ச்சனா கல்பாதி தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
’கோட்’ படத்தின் அனைத்து மொழி உரிமையையும் அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழி உரிமையையும் ஜீ டிவி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து ’கோட்’ திரைப்படம் திரையரங்க ரிலீஸ்க்கு பின்னர் ஒரு மாதம் கழித்து ஜீ டிவியில் தான் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Happy to announce @ZeeTamil has bagged the satellite rights for #TheGreatestOfAllTime!@actorvijay Sir #TheGreatestOfAllTime
A @vp_offl Hero#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh#GOAT @thisisysr @actorprashanth @PDdancing @dhilipaction #Mohan #Jayaram… pic.twitter.com/30j3dZkJaA
Listen News!