• May 19 2024

'கிசுகிசுவில் சிக்காமல் இருக்க ஆர்யா விஷாலுக்கு டிப்ஸ் கொடுங்க'-நடிகர் ஜுவா கூறிய விடயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜுவா. ஆசை ஆசை என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து ராம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பிற்கு தேசிய விருது கிடைத்ததோடு படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் டிஸ்யூம், கோ, ராமேஸ்வரம், சிங்கம் புலி, ரௌத்திரம், நீ தானே பொன் வசந்தம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் சில ஆண்டுகளுக்கு முதல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது ஸ்டன்ட் மாஸ்டர் ஆக இருப்பது கஷ்டம் அவங்களால தான் நான் நிறைய ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கிறேன் என்று கூறினார்.

அப்போது சினிமாவில் இவ்வளவு காலம் இருக்கிறீங்க எப்பிடி கிசுகிசுவில் சிக்காமல் இருக்கிறீங்க என்று தொகுப்பாளர் ஜெகன் கேட்டார். அதற்கு பதில் கூறிய ஜுவா. நான் அவ்வளவுக்கு இன்னும் வளரவில்லை அதனால தான் என்னைப் பற்றி ஒரு கிசுகிசுவும் வரல என்று கூறினார்.

இல்லை நீங்க ஒழுக்கமாக இருக்கிறது தான் காரணம் என்று தான் ஜெகன் கூறியதோடு இப்படி கிசுகிசுவில் சிக்காமல் இருப்பது எப்படி என்று ஆர்யா மற்றும் விஷாலுக்கு சொல்லிக் கொடுங்க என்று கூறிய போது அவங்கள பார்க்க பொறாமையா இருக்கு என்று காமெடியாக சொல்லி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement