பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சரவணனோட அஞ்சலி பைக்கில ஏறிப்போனதை நினைத்துப் பார்த்து மயில் அழுது கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த சுடர் எதுக்காக அக்கா அழுது கொண்டிருக்கிற என்று கேட்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்கியம் அங்க வந்து எதுக்காக உன்ர அக்கா அழுது கொண்டிருக்கிறாள் என்று சுடரைப் பார்த்துக் கேட்கிறார். மறுநாள் காலையில, பாண்டியன் எந்த ட்ரெஸ்ஸும் துவைக்காமல் இருக்கிறதைப் பார்த்துக் கோபப்படுறார்.

அதைத் தொடர்ந்து, பாண்டியன் அரசி கிட்ட வந்து எந்த ட்ரெஸ்ஸும் துவைக்கலயா என்று கேட்கிறார். அதுக்கு கோமதி என்னால சொல்லாமல் எந்த விஷயமும் செய்யேலாது என்கிறார். மேலும், எனக்கு இந்த வீட்டில என்ன உரிமை இருக்கு என்றே தெரியல என்கிறார் கோமதி. பின் பாண்டியன் எல்லா ட்ரெஸ்ஸையும் தானே துவைக்கிறார்.
அதைப் பார்த்த காந்திமதி எதுக்காக இப்புடி இருக்கிற என்று கோமதியைப் பார்த்துக் கேட்கிறார். பின் கோமதி இப்புடி ஏதாவது செய்தால் தன்னும் அவர் என்கூட கதைப்பாரு என்று தான் இப்புடி செய்யுறேன் என்கிறார். அதனை அடுத்து காந்திமதி கொஞ்சம் தன்மையா இருக்க சொல்லுறார். பின் செந்திலுக்கு மீனாவோட அப்பா வீடு வாங்கிறதுக்கு உரிய ஆள் இண்டைக்கு வந்திருவாரு என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!