• May 27 2026

ராஜிக்குத் தெரியாமல் கதிர் செய்த ரகசிய வேலை.. அம்பலப்படுத்திய காந்திமதி.! டுடே எபிசொட்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ராஜி கதிரைப் பார்த்து நானும் ட்ராவெல்ஸிற்கு வரவா என்று கேட்கிறார். அதுக்கு கதிர் ஒன்னும் வேணாம் நீ வீட்டிலேயே இரு என்கிறார். அதைக் கேட்ட ராஜி ஈவினிங் எங்கயாவது போகலாமா என்று கேட்கிறார். அதுக்கு கதிரும் சம்மதிக்கிறார். அந்த நேரம் பார்த்து பாட்டி அங்க வந்து ஏன் ஒருமாதிரியா இருக்கிற என்று கேட்கிறார். அதுக்கு ராஜி நான் நல்லா தான் இருக்கிறேன் என்று சொல்லுறார். 

அதைத் தொடர்ந்து பாட்டி கதிரை வம்பிக்கிழுக்கிற மாதிரி நான் அந்த வீட்டில சந்தோசமா இருக்கிறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கதிர் நடந்ததெல்லாத்துக்கும் மன்னிப்புக் கேட்கிறார். மேலும், எனக்கு உங்களை வீட்டை விட்டு அனுப்பனும் என்ற எண்ணம் இல்லை சூழ்நிலை அப்படி மாறிடுச்சு என்கிறார் கதிர். அதைக் கேட்ட பாட்டி என் பையனுக்காக தானே இதெல்லாம் செய்தனீ நான் ஒன்னும் நினைக்கல என்கிறார். 


பின் ராஜி எனக்கு ஒன்னுமே தெரியாது என்கிறார். அதைத் தொடர்ந்து பாட்டி உங்க அப்பா தான் உன்ர புருஷன் கிட்ட பேசி என்னைக் கூப்பிட்டார் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ராஜி நீ ஏன் எதுவுமே எனக்கு சொல்லேல என்று கோபப்படுறார். மறுபக்கம் செந்தில் மீனாவைப் பார்த்து இப்பவெல்லாம் நீ அமைதியாகிட்ட என்ன நடந்த என்று கேட்கிறார்.

அதுக்கு மீனா இப்ப நான் திருந்திட்டேன் என்கிறார்.அதைத் தொடர்ந்து சரவணன் மயில் கிட்ட உன்னோட மனசில நீ என்னதான் நினைச்சுக் கொண்டிருக்கிற என்று கேட்கிறார். மேலும், அம்மா கொடுத்த பணத்தை வாங்கிறதில உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார் சரவணன். அதுக்கு மயில் அவங்க என்ன நோக்கத்தோட பணம் கொடுத்தாங்க என்று எனக்குத் தெரியும் என்கிறார். அப்படியே கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement