• Dec 03 2024

ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தில் இந்த 4 பிரபலங்கள் உறுதி.. அப்ப மல்டி ஸ்டார் படம் தானே..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ படத்தில் சில திரையுலக பிரபலங்கள் இணைவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் நான்கு நட்சத்திரங்கள் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 171 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்தது. இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணி முடிவடைந்து தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கோலிவுட் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதே போல் இன்னொரு முக்கிய கேரக்டரில் சாண்டி மாஸ்டர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி தமிழ் திரை உலகில் உள்ள சில பிரபலங்களும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ’ஜெயிலர்’ போலவே இந்த படமும் ஒரு மல்டி ஸ்டார் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ’ஜெயிலர்’ போலவே வெற்றி பெறுமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement