• Apr 28 2024

முதலில் உங்க பேருக்கு பின்னாடி இருக்கிற ஜாதிப் பெயர நீக்குங்க – சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோவை விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் சிம்பு. சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அந்த வகையில் பல எதிர்பார்ப்புகளுடன் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பத்து தல.

இந்த படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கவுதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. சில தினங்களுக்கு முன் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை காண ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் திரையரங்கிற்கு சென்று இருக்கிறார்கள்.

அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்கள் சிலர் தங்களுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் டிக்கெட் எடுத்து படம் பார்க்க சென்றிருக்கிறார்கள். அவர்கள் சாலையோரம் பாசிமணி விற்பவர்கள். இதை அறிந்த திரையரங்க ஊழியர், உள்ளே அவர்களை விடாமல் தடுத்தார். இது தொடர்பான வீடியோ தான் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி இருந்தது. இது குறித்து பலருமே கண்டனங்கள் எழுப்பி இருந்தார்கள்.

இதை அடுத்து திரையரங்க நிர்வாகம், யு/ஏ சான்றிதழ் உடன் இந்த படம் வெளியாகி இருப்பதால் 12 வயது உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க முடியாது. இதன் அடிப்படையில் தான் அவர்களை உள்ளே செல்ல மறுத்தனர் என்று விளக்கம் கொடுத்திருந்தார்கள். அதற்குப் பின்பு அவர்களை அனுமதித்ததாகவும், அவர்கள் படம் பார்க்கும் வீடியோவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள். இந்த விவகாரம் தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் திரையரங்க பணியாளர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழககு பதிவு செய்திருந்தார்கள்.

 இந்த நிலையில் இது குறித்து தற்போது நடிகை சனம் செட்டியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், இந்தியாவில் பல இடத்தில் புற்றுநோய் போல இந்த ஜாதி பாகுபாடு பரவிக் கொண்டு வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா? இந்த பிரச்சனை பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் இருந்து கொண்டு வருகிறது. இது ஏன் நம்மால் ஒழிக்க முடியாதா? கல்வி மற்றும் இது குறித்த விழிப்புணர்வு இருந்தால் நிச்சயம் இதை ஒழிக்க முடியும்.

அந்த திரையரங்கில் உள்ளே நடந்த நிகழ்வை வீடியோ எடுத்த நபருக்கு என்னுடைய பாராட்டுக்கள். அந்த வீடியோவால் தான் நாம் அடிக்கடி சென்று வரும் இடத்தில் ஜாதி இருக்கிறது என்பது தெரிய வருகிறது. மேலும், தெரியாமல் பல இடத்தில் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்து வருகிறது. அதனால் நான் தயவு கூர்ந்து சொல்கிறேன், ஜாதிய ஏற்றத்தாழ்வு எங்கே நடந்தாலும் அதனை உடனடியாக வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுங்கள். தட்டிக் கேட்பதற்கு நாங்கள் இருக்கிறோம். நாம் தான் கேட்க வேண்டும். கண்டிப்பாக ஒருநாள் இது மாறும் என்று கூறியிருக்கிறார். சனம் ஷெட்டியின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் முதலில் உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதிப்பெயரை நீக்குங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர்.




Advertisement

Advertisement

Advertisement