• May 11 2024

விடுதலை படக்குழுவினருக்கு , வெற்றிமாறன் கொடுத்த பரிசு! குவியும் பாராட்டுக்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில்  தற்போது அதிரடி ஆக்ஷன் கிரைம் திரில்லரில் இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் ‘விடுதலை’. பிரபல நகைச்சுவை நடிகர் சூரியை கதையின் நாயகனாக முதல் முறையாக அறிமுகப்படுத்தி மேலும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்க வைத்துள்ளார்

இப்படம்  தற்போது தியேட்டர்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சூரி, விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ் சகோதரி பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.

இரண்டு நாட்களில் 13 கோடியை விட அதிகமாக விடுதலை படம் வசூலித்து இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.இந்நிலையில் வெற்றிமாறன் தற்போது படக்குழுவினர் எல்லோருக்கும் கிப்ட் கொடுத்து இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கக்காசு பரிசாக கொடுத்திருக்கிறார் அவர். அதன் புகைப்படங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே அவர் தனது உதவி இயக்குனர்கள் 25 பேருக்கு நிலம் வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement