• Sep 17 2024

சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

1978ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகியதில் இருந்து தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சிரஞ்சீவி.

இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என புகழ் பெற்றவர்.

திரையுலகில் 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்கு திரைப்பட நடிகர் என்ற பெருமை பெற்றவரும் ஆவார்.

சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்வி ராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிஃபர். இப்படம்,மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனை நிகழ்த்தியது. இப் படத்தின் வெற்றியால் மற்ற மொழிப் படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இதை அடுத்து இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. அதில் மோகன்லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார். சிரஞ்சீவி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் பிருத்விராஜ் நடித்திருந்த வேடத்தில் நடிக்க சல்மான்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து சல்மான் கான் நடிக்கும் முதல் தென்னிந்திய படமாக காட்ஃபாதர் உருவாகி வருகிறது.மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆன லூசிஃபர் திரைப்படம் தற்போது தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து இப்போது முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் சிரஞ்சீவி லுக் வரும் ஜூலை 4ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement