• Sep 17 2024

எல்லாம் பொண்டாட்டி வந்த நேரம் தான்..விக்னேஷ் சிவனுக்கு குவியும் வாழ்த்துக்கள்; காரணம் என்ன தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்பட்டு வரும் இளம் ஜோடிகளாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் விளங்குகின்றனர். இவர்கள் இருவரும் 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் இணைந்து பணியாற்றியதிலிருந்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் திகதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணத்தில் திரைப் பிரபலங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என சுமார் 200 இற்கும் மேற்பட்ட சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் முடித்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு, தாய் வீட்டில் விருந்து என ஜாலியாக இருந்த இந்த புதுமணத் தம்பதிகள் தற்போது தமது ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக தாய்லாந்து சென்று திரும்பி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தாய்லாந்தில் எடுத்த ஜோடிப் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் தத்தமது வேலைகளில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில் நான் நடிகை நயன்தாராவை திருமணம் செய்த பின்னர் தற்போது விக்னேஷ் சிவனுக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அது என்னவென்றால் நாற்பத்தி நான்காவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் 28-ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் திகதி வரை சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கின்றது. இந்தப் பிரமாண்டமான போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த சுமார் 2500 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவை நடத்தி தர விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தான் நாற்பத்தி நான்காவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை நடத்த உள்ளதாக தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளன. இதனை அறிந்த நயன் மற்றும் விக்கியின் ரசிகர்கள் "எல்லாம் பொண்டாட்டி வந்த நேரம் தான் விக்னேஷ் சிவனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது" எனக் கூறி தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது விக்னேஷ் சிவன் அஜித் படத்திற்கு முன்பாகவே பெரிய நிகழ்வான இந்த ஒலிம்பியாட் தொடக்க விழாவை நடத்த உள்ளமை அவரின் ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement