• May 18 2024

விஷால் நடிப்பில் உருவாகவுள்ள மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘மார்க் ஆண்டனி.

இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கவுள்ளதோடு பான்-இந்திய படமாக உருவாகவுள்ள இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னதாக, தயாரிப்பு பிரச்சினைகளால் இப்படம் கிடப்பில் போடப்பட்டதாக வதந்திகள் பரவியது, ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாம். இப்போது, ​​விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் நடிக்கும் இந்த திரைப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையில், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மினி ஸ்டுடியோஸ் பேனரில் கீழ் எஸ் வினோத் குமார் தயாரிக்கும் இப்படம் கதை ஒரு கேங்ஸ்டர் பின்னணியில் இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement