• May 14 2024

சிகிச்சை பலனின்றி இறந்த நடிகர் அர்ஜுனின் தாயார்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் முக்கிய நடிகர் தான் அர்ஜுன். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர தற்பொழுது குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவரது வீட்டில் ஒரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி இன்று பெங்களூரில் காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

85 வயதான லக்ஷ்மி தேவி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடு நடைபெற்று வருகின்றது.இவரின் மரணம் மற்றும் இறுதி சடங்கு பற்றி அர்ஜுன் குடும்பம் இன்னும் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு தான் அர்ஜுனின் மாமனார் நடிகர் ராஜேஷ் காலமானார், இதனை தொடர்ந்து தயாரும் இறப்புக்குள்ளானது ரசிகர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement