• Apr 28 2024

தந்தை மகன் மோதல்...தளபதி 68 படத்தின் கதை இது தானா? அப்போ செம சம்பவம் இருக்கு போல...!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்திற்கு பின் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.


ஏற்கனவே இப்படத்தின் ஆடியோ ரைட் விற்பனை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, மாதவன், ஜெய் நடிக்கிறார்கள் என தகவல் தெரிவிக்கின்றனர்.


மேலும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் என இரு நடிகைகள் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், தளபதி 68 படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய், மகன் - தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகனுக்கும் தந்தைக்கும் இடையிலான மோதல் தான் படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.


மேலும், இதில் ஒரு விஜய் பீஸ்ட் படத்தில் வருவது போல் Raw ஏஜென்ட் ரோலில் நடிக்கிறாராம். முழுமையான ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்கி வருகிறார்களாம். இதுவே தளபதி 68 படத்தின் அப்டேட் -ஆக வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement