• Sep 13 2024

நடிகர் வடிவேலு வீட்டில் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது காமெடிக்கு என்று ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளனர். மேலும் அவரது காமெடி காட்சிகளை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் இப்போதும் உலா வருகிறது. 


சினிமாவில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் வடிவேலுவிற்கு நிஜ வாழ்க்கையில் மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகர் வடிவேலு வீட்டில் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் அவரது தம்பி  ஜெகதீஸ்வரன் தற்போது உயிரிழந்துள்ளார். இவர் காதல் அழிவதில்லை படத்தில் நடித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் 55 வயதான ஜெகதீஸ்வரன் கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று விரகனூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

இவரின் திடீர் உயிரிழப்பானது பலருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவரது உடல் இன்று மாலை அல்லது நாளை காலை நல்லடக்கம் செய்யப்படும் எனக் கூறப்படுகின்றது. உயிரிழந்த வடிவேலுவின் சகோதரருக்கு திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement