• May 19 2024

தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலிருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக மாறன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இருப்பினும் அத்திரைப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்த அறிவிப்பு நாளை வெளிவரலாம் என்று கூறப்படுகிறது

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை வெளியிட உள்ளார்.தனுஷுடன் பிரகாஷ்ராஜ் பாரதிராஜா நித்யாமேனன் ராசி கண்ணா பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

‘லைஃப் டைம் செட்டில்மன்ட் நன்றி ஆண்டவரே’-லோகேஷ் கனகராஜ் போட்ட உருக்கமான பதிவு

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement