தமிழ் சினிமாவின் சத்ரிய நாயகனாக திகழும் தனுஷ், பன்முகத்தன்மை கொண்ட நடிகராக இந்திய சினிமா ரசிகர்களிடம் பரவலாக அறியப்பட்டு வருகிறார். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் தனது நடிப்புத்திறனால் தனித்துவம் காட்டியிருக்கும் தனுஷ், தற்போது 'Tere Ishq Mein' எனும் ஹிந்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், இப்படத்தின் BTS புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கிலும் வைரலாகி வருகின்றன.
'Tere Ishq Mein' என்பது, ஹிந்தியில் உருவாகும் ஒரு காதல் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் தற்பொழுது வெளியான BTS புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
Listen News!