• Sep 21 2024

சியான் 61 திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டப்பிங் ஆட்டிஸ்டாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகர் விக்ரம்.இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் முன்னணி ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார்.இவரது நடிப்பில் இறுதியாக மகான் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகின்றார். கோப்ரா படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து பெரியளவில் உருவாகும் திரைப்படம் சியான் 61, சமீபத்தில் தான் இப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

அத்தோடு இப்படம் கே.ஜி.எப் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம் என்றும், பெரியளவில் இப்படம் 3டி-ல் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

இதற்கிடையே தற்போது இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளன. ஆம், இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா, அப்படத்தை தொடர்ந்து விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement