சினிமா துறையில் அசிஸ்டண்ட் டயரெக்டராக பணியாற்றுவோர் தங்களது அனுபவத்தையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள சில முக்கிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலைமை உள்ளது. இது குறித்து சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி முக்கிய அறிவிப்பு ஒன்றினை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், அசிஸ்டண்ட் டயரெக்டராக பணியாற்றும் ஒருவர் குறைந்தது 2 அல்லது 3 வருடங்களாவது தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு வேலை பற்றிய முழுமையான புரிதல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஒரு அசிஸ்டண்ட் டயரெக்டர் பெரிய இயக்குநரின் கீழ் குறைந்தது 3 படங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும் என்றார். அவ்வாறு பணியாற்றுவதன் மூலம் அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் படப்பிடிப்பு மேலாண்மையில் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்றார். அதனையே தயாரிப்பாளர்களும் பெரிதும் விரும்புவார்கள் என்றார்.
மேலும் , அசிஸ்டண்ட் டயரெக்டர்கள் தங்கள் எதிர்கால வெற்றிக்காக குறைந்தது 2-3 வருடங்கள் தொடர்ந்து பணி செய்ய வேண்டும். அத்துடன் பெரிய இயக்குநர்களின் படங்களில் பணிபுரிந்தால் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். இப்படியான அனுபவம் தான் விரைவில் ஒருவரை இயக்குநராக மாறுவதற்கும் உதவியாக இருக்கும் என்றார் அர்ச்சனா.
Listen News!