• Jan 18 2025

ஒவ்வொருத்தர் கூடவும் இத்தன வருஷம் வாழ்ந்து இருக்கன்; யாரும் எனக்கு செட் ஆகல! நானே அவங்கள துரத்திடுவன்! ஷகிலா பகீர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாத்திரையுலகில் மிகவும் ஆபாச நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஷகிலா.எனினும், அவரது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை நினைத்து தற்போது வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எனக்கு கல்யாணம் பண்ண ஆசை இருந்தது ஆனால், யாரும் எனக்கு செட் ஆகவில்லை என்று நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார். 

இவர் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு ஆபாச படங்களில் நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆனார். அதன்படி, இவர் நடித்த படங்களில் மோசமான படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி நடனம் என அனைத்தும் இந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை  தம்வசப்படுத்திக்க கொண்டார் எனலாம்.

அத்துடன், இவர் தன் 15வது வயதில் 'ப்ளே கேள்ஸ்' என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.'அதன் பின்னர் மலையாளம். தெலுங்கு. தமிழ் என பல்வேறு ஆபாச  திரைப்படங்களில் நடித்து மக்களின் வெறுப்பை பெற்றார்


எனினும், 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார் என்பதும் ஆச்சரியமான ஒன்றல்ல.

ஆனாலும். இவரது அடையாளத்தையே மாற்றியது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி. குறித்த நிகழ்ச்சியினால் புதிய அவதாரம் எடுத்தார் ஷகிலா.இதன் மூலம், தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் தன் வசம் கவர்ந்ததோடு, தற்போது  பிரபலங்களை வைத்து சிறப்பாக பேட்டி எடுத்து வருகிறார்.


இந்நிலையில் திருமணம் தொடர்பில் அவர் வழங்கிய பேட்டி ஒன்று பெரிதும் பேசப்படுகிறது.இதன் போது அவர் தெரிவிக்கையில்,

'ஏன்? நா பொம்பள இல்லயா, எனக்கும் ஆசை இருந்தது. ஆனால், யாரும் செட் ஆகல. ஏன் என்றா ஒவ்வொருத்தரையும் நான் துரத்திடுவன். மூனு வருஷம் ஒருத்தன், நாலு வருஷம் ஒருத்தன், ஏழு வருஷம் ஒருத்தன், பத்து வருஷம் என ஒவ்வொருத்தர் கூடவும் இத்தன வருஷம் வாழ்ந்து இருக்கன்.

அனைவரும் போனதற்கு காரணம் நான் தான், குடும்பமா வாழ்க்கையானு கேள்வி வந்த போது, நான் என் குடும்பத்த தான் பார்த்தன். என் வாழ்க்கைய பார்க்காம விட்டுட்டன். இதனால தான் இப்போ தனியா இருக்கன்' என்று அந்த பேட்டியில் மனம் திறந்து தனது திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். 


Advertisement

Advertisement