• May 19 2024

எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்- சிவகார்த்திகேயனின் அசத்தலான நடிப்பில் வெளியாகிய மாவீரன் படத்தின் ட்ரெய்லர்

stella / 10 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.பிரபல இயக்குநர் மிஷ்கின் இப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து இருக்கிறார். பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

மாவீரன் ஒரு பேண்டஸி திரைப்படமாகும். இதில் சிவகார்த்திகேயன் கார்டூனிஸ்ட் ஆக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மாவீரன் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், மாவீரன் படத்தின் அடுத்த அப்டேட் தற்பொழுது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement