• Sep 13 2024

கதிரைக் கடந்து சென்ற ஜனனி... ஜீவானந்தத்தை போட்டுத்தள்ள வீட்டை முற்றுகையிடும் கதிர், வளவன் கும்பல்...? பரபரப்பான கட்டத்தில் 'Ethirneechal' serial..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் ஜீவானந்தம் தனது சொந்த ஊரான கவுஞ்சில் இருந்து தன்னுடைய மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக ஊருக்குள் நடந்து வந்து  கொண்டு இருக்கிறார். அந்த சமயத்தில் வளவனும் கதிரும் ஆட்களுடன் ஜீவானதத்தை போட்டுத் தள்ளுவதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவருக்காக காத்திருந்து அதிக நேரமானதால் கடுப்பான கதிர் வளவனை பயங்கரமாக திட்டுகிறார். பின்னர் கதிர் குரலை உயர்த்தி கத்துவதால் வளவன் கோபமடைகின்றார்.


மறுபுறம் சக்திக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றுவதற்காக ஈஸ்வரி நிக்கும் போது அங்கு வந்த குணசேகரன் "என்ன கண்காட்சி நடக்குதா?. வியாதியெல்லாம் அதை கொண்டாட கொண்டாட தான் நம்ம கூட ஒட்டிகிட்டு இருக்கும். அப்படியே துடைச்சு எறிஞ்சுட்டு போயிட்டே இருக்கணும்" எனக் கூறுகின்றார். 

பாதிக்கு நந்தினி "எல்லாரும் உங்கள மாதிரி இருக்க முடியுமா? நாங்க எல்லாம் மனுஷ பிறவி, நீங்க தெய்வப் பிறவி இல்ல" என முகத்தடி கொடுக்கின்றார். பின்னர் குணசேகரன் "ஈஸ்வரி சொத்து விஷயமாக ஊருக்கு போனானு கேள்விப்பட்டேன் ஆனா அவ சக்திக்கு பணிவிடை செய்துட்டு இருக்கா. என்னைத் தவிர மத்தவங்க எல்லார் மேலையும் அவ அன்பா தான் இருக்கறா" எனப் பட்டும் படாத மாதிரியும் கூறுகின்றார். 

மேலும் இன்னும் இரண்டு நாட்களில் எல்லாம் அடங்கிவிடும் என சொல்லிவிட்டு குணசேகரன் வெளியே கிளம்புகிறார். அதேசமயத்தில் கவுஞ்சியில் ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக பெரியவர் வீட்டில் காத்து கொண்டு இருக்கிறார் ஜனனி. அப்போது பெரியவர் வந்து "ஜீவானந்தம் வருவதாக தகவல் வந்திருக்கு. அவரோட வீட்டுக்கு மலையேறி போகணும். அடிவாரம் வரைக்கும் நான் உன்னை அழைச்சிட்டு போறேன். அதுக்கு அப்பறம் நீ போவீயா" எனக் கூறி ஜனனிக்கு பாதை காட்டி அழைத்து செல்கின்றார்.


அவர்கள் இருவரும் கதிர் இருக்கும் இடத்தைத் தாண்டி தான் அவர்கள் செல்கிறார்கள், ஆனால் நல்ல வேளை கதிரும் ஜனனியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. பின்பு பெரியவர் ஜனனியை மலையடிவாரத்தில் விட்டு வழியைக் காட்டி விட்டு செல்கின்றார். அப்போது வளவனின் ஆட்களில் ஒருவன் ஓடிவந்து ஜீவானந்தம் இன்று வருவதாகவும், அவரின் வீட்டை கண்டுபிடித்து விட்டதாகவும் கதிர் கும்பலிடம் கூறுகின்றார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஜீவானந்தம் வீட்டை சுற்றி வளைத்து முற்றுகையிட செல்கிறார்கள். 

இவ்வாறாக நேற்றைய எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement