அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினம் என்ன நிகழவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.
அதில் ஆதிரைக்கும், கரிகாலனுக்கும் ஹனிமூன் ஏற்பாடுகள் நடக்கின்றன. அந்தவகையில் கதிர் குணசேகரனிடம் கொடைக்கானலில் ஹனிமூனுக்கு ஏற்பாடு பண்ணியிருப்பதாக கூறுகின்றார். அதைக் கேட்ட கரிகாலன் "ஐயே" என முகம் சுளிக்கின்றார்.
பதிலுக்கு ஞானம் கரிகாலனிடம் "ஹனிமூனுக்கு என்ன உன்னை லண்டனுக்கு அனுப்பி வைப்பாங்க என்று நினைச்சியா" எனக் கேட்கின்றார். அதற்கு கரிகாலன் "நீங்க சும்மாவே எச்சில் கையால காக்கா ஓட்ட மாட்டீங்க" என சொல்லிக் குத்திக் காட்டுகின்றார்.
அந்த சமயத்தில் விசாலாட்சிக்கு அருகில் வந்த ஜனனியும் சக்தியும் "புதிதாக கம்பெனி ஆரம்பித்து இருக்கோம், நல்ல நாள் பார்த்து நீ தான்மா சொல்லணும்" என்கிறார். அவரும் பார்த்து சொல்லுறேன் என சம்மதிக்கின்றார்.
உடனே குணசேகரன் "யார் வீட்டுக்கு வந்து யார் கடையைப் போடுறது" என ஜனனியிடம் கேட்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.
Listen News!