• May 19 2024

முதல் நாளில் யானை படம் செய்துள்ள வசூல்? வெளியானது விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மாஸ் நடிகராக அறியமப்பட்டவர் தான் அருண் விஜய். இப்படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்ததன் மூலம் பிரபல்யமான இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் யானை . இப்படத்தை கமெர்ஷியல் இயக்குநரும் இவருடைய மச்சினனுமான ஹரி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இவருடன் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், அம்மு அபிராமி, போஸ் வெங்கட் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நேற்று வெளியான இத் திரைப்படம் மிகவும் விறுவிறுப்புடனும், வேகமாகவும் கதைக்களம் நகரும். இப்படமும் விறுவிறுப்புடனும், ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது.

முதல் நாளில் தமிழகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் ரூ. 4 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

நல்ல விமர்சனம் கிடைத்திருப்பதால் வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement