• May 20 2024

லியோ பட ஷூட்டிங்கில் நிலநடுக்கம்..!. எல்லாரும் எப்படி இருக்காங்க? வெளியான தகவல் இதோ!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் லியோ படப்பிடிப்பு நடைபெறும் காஷ்மீரில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டதை அப்பட எழுத்தாளர் ரத்னகுமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியான கொஞ்ச நேரத்திலேயே,  இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தாங்கள் நலமாக உள்ளதாக வடிவேலு சந்திரமுகி பங்களாவுக்குள் பயந்து நடுங்கிக்கொண்டே செல்லும் மீம் டெம்ப்ளேட்டை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement