• Apr 26 2024

நானியின் மாறுபட்ட மிரட்டலான நடிப்பில் தசரா..டிரெண்டாகும் தமிழ் டீஸர்..!- குவியும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் பான் இந்தியா திரைப்படம் தான் தசரா.ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர்.


 நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு,தமிழ்,கன்னடம்,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.நிலக்கரி சுரங்கம் பிண்ணனியில் இந்த டீஸர் அமைந்துள்ளது. டீஸரில் நானியின் மாறுபட்ட மிரட்டலான தோற்றமும் ஆக்ரோஷமான நடிப்பும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


24 மணி நேரத்தில் 1.4 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப் பக்கத்தில் இந்த டீஸர் கடந்துள்ளது. மேலும் டீஸர் டிரெண்டிங்கிலும் முன்னணியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement