• Apr 15 2026

உங்களுக்கு இன்னும் தைரியம் வரலையா செழியன்? ஈஸ்வரி வீட்டில் பெண் குடும்பத்தாருக்கு அதிர்ச்சி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம். 

அதில், ஈஸ்வரி வீட்டுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக பெண் வீட்டார்  வருகிறார்கள். இதன் போது உங்க பொண்ணு போட்டோ இருக்காங்க என கேட்ட ஈஸ்வரி, போட்டோவை வாங்கி பார்க்கிறார். நீயும் பாருடா என செழியனுக்கு  காட்டுகிறார்.

ஆனால் செழியன் அந்த போட்டோவை பார்க்காமல் கோபத்தில் எழுந்து ரூமுக்கு செல்கிறார். 


அந்த நேரத்தில் பாக்கியாவும், இனியாவும் அங்கு வர, இதுதான் மாப்பிள்ளையோட அம்மா என பாக்கியாவை அறிமுகம் செய்து, இதுதான் நாம பார்த்திருக்கிற பொண்ணோட குடும்பம் என அவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் ஈஸ்வரி. அதற்கு ஒன்றும் பேசாமல் உள்ளே போகிறார் பாக்கியா.

இதைத்தொடர்ந்து செழியனை அழைத்து வந்த பாக்கியா, உன் மனசுல என்ன இருக்குனு சொல்லுடா, ஜெனிக்கும் இவனுக்கும் டிவோஸ் கூட ஆகல, செழியன்  ஜெனி கூட சேர்ந்து வாழணும் என பாக்கியா சொல்ல, இதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

எனினும், செழியன் ஒன்றும் பேச முடியாமல் நிற்கிறார். பாக்கியா பேசியதை பார்த்து கோபம் அடைகிறார் கோபி. இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.



Advertisement

Advertisement