தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டு வருகின்றது. இந்த திரைப்படம் சுமார் 2000 திரையரங்குகளில் வெளியானது.
மகாராஜா படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெயிலர்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தன.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜய் சேதுபதியின் நடிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த படத்தில் பாராட்டுகளை பெற்று வருகின்றன.

சென்னையில் தனது ரசிகர்களுடன் மகாராஜா படத்தை விஜய் சேதுபதி திரையரங்கில் சென்று பார்த்துள்ளார். இதற்கு ரசிகர்களும் உற்சாகமான வரவேற்பை கொடுத்திருந்தார்கள்.
இந்த நிலையில், மகாராஜா படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் படம் பற்றி கேட்டபோது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து தெறிக்கவிட்டுள்ளார்கள்.
அதாவது மகாராஜா படத்தை வயசு பொண்ணுங்க பார்க்காதீங்க. ஏன்னா இந்த படம் அவ்வளவு எமோஷனலாக இருக்குது. பொண்ணுங்களின் முக்கியத்துவத்தை இந்த படம் எடுத்துக்காட்டி இருக்குது. ஆரம்பத்துல படம் மொக்கையா இருக்கும் என்றுதான் நினைச்சோம். ஆனால் படத்த பார்த்த பிறகுதான் விஜய் சேதுபதி வாழ்ந்திருக்கார் என்று தோணுது. இந்த வருஷத்துல பிளாக் பாஸ்டர் படம் என்றால் அது விஜய் சேதுபதி நடிச்ச மகாராஜா படம்தான் என்று படம் பார்த்து விட்டு வெளியில் வரும் அத்தனை ரசிகர்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகின்றார்கள்.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!