• Jun 21 2024

வாழ்க்கை ஒரு வட்டம்: காமெடியனில் இருந்து ஹீரோவான சூரி.. ஹீரோவில் இருந்து காமெடியனாகும் சந்தானம்..!

Sivalingam / 6 days ago

Advertisement

Listen News!

சூரி ஹீரோவாக நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து வருவதால் அவர் மீண்டும் காமெடியனாக மாறலாமா என்று யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தப்பு தப்பாக இங்கிலீஷ் பேசி மொக்க காமெடி செய்து வந்த சூரி ’விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவான நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து சூரி ஹீரோவாக நடித்த ’கருடன்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுமாராக காமெடி செய்து கொண்டிருந்த சூரிக்கு ஹீரோ வேடம் சக்சஸ் ஆகிவிட்ட நிலையில் அமீர் உட்பட பல பிரபல இயக்குனர்கள் அவரிடம் ஹீரோவாக நடிக்க கால்ஷீட் கேட்டு வருவதாக தெரிகிறது. எனவே இனிமேல் சூரி  காமெடியனாக   நடிக்க மாட்டார் என்றும் தொடர்ந்த ஹீரோவாக தான் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் சூப்பராக காமெடி செய்து கொண்டிருந்த சந்தானம், ஹீரோ ஆசையால் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்த எந்த படமும் சூப்பர் சக்சஸ் என்ற அளவில் இல்லாமல் சுமாரான வெற்றி மற்றும் தோல்வி படங்களாகி தான் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சந்தானத்திற்கு நெருக்கமானவர்கள் கூறிய அட்வைஸ்படி அவர் இனிமேல் காமெடியனாக நடிக்கலாமா என்று யோசித்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் வாழ்க்கை ஒரு வட்டம் என்றும் ஹீரோவாக நடித்த சந்தானம் காமெடி நடிகராக மாறப் போகிறார் என்றும் காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த சூரி ஹீரோவாகி உள்ளார் என்றும் கோலிவுட் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement