• Oct 09 2024

நைட்டுக்கு மாயா வேணுமா? கொச்சையாக பேசிய பூர்ணிமாவை விளக்கம் கேட்டு அவமானப்படுத்திய பிக் பாஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது எனலாம். தற்போது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் வழக்குகளால் மேலும் விறுவிறுப்பாக நகர்கிறது.

வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக வந்த பிராவோவிடம் 'நைட்டுக்கு மாயா வேணுமா?' என்ற அர்த்தத்தில் பூர்ணிமா ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு பிராவோ 'இல்லைங்க' என்று சொல்லும் காட்சியும் வீடியோ ஒன்றில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து 'அது என்ன நைட்டுக்கு' என்று மாயா கேட்க பூர்ணிமா வேறு ஒரு அர்த்தத்தில் சிரிக்கிறார். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள்  சரமாரியாக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், பூர்ணிமா மற்றும் ஐசு இருவரும் அவ்வாறு பேசியதற்கு பிக் பாஸ் விளக்கம் கேட்டிருக்கிறார். அத்துடன், பிராவோவிற்காக பூர்ணிமா மற்றும் ஐசுவிடம் தினேஷ் சரமாரியாக கேள்விகளையும் கேட்டு இருந்தார்.

அதேவேளை, பூர்ணிமா இவ்வாறு பேசியதும், மாயா பிராவோ மீது குற்றம் சாட்டியதும் பிரதீப்பை தொடர்ந்து பிராவோவை வெளியே தூக்குவதற்கான பிளான் போலவே பலரும் நோக்குகின்றனர். 

இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் பிரதீப் வர வேண்டும் என்றும் பலர் கோரிக்கை வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement