• Apr 26 2024

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு இவ்வளவு கியூட்டான அக்கா இருக்கின்றாரா?- அடடே அவரும் நடிகை தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து வந்தவர் தான் ஸ்ரீதிவ்யா. இவர் இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் வருத்தப்படாத சங்கம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்.

தொடர்ந்து காக்கி சட்டை, ஜீவா, ஈட்டி, மருது உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகி நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.ஆனால், இதன்பின் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.


விரைவில் மீண்டும் பழையபடி தொடர்ந்து பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக ஸ்ரீ திவ்யா மாறுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இறுதியாக மலையாளத்தில் வெளியான ஜனகனமன என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அத்தோடு இவருக்கு ஸ்ரீ ரம்யா எனும் ஒரு அக்கா ஒருவர் இருக்கிறார். அவர் 1940 Lo Oka Gramam எனும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.


அதே போல் தமிழில் வெளிவந்த யமுனா எனும் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement