மலையாள திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற 'லூசிபர்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள 'எம்புரான்' படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியத்துடன் அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். மேலும் முன்னணி நடிகர் மோகன்லால் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்த மாஸான ட்ரெய்லரைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,"என்ன ஒரு பிரம்மாண்டம்!" என பிரித்விராஜின் திறமையை பாராட்டியுள்ளார். அவரின் பாராட்டில் பிரித்விராஜ் நெகிழ்ச்சி அடைந்து, தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
2019ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது. இதில், மோகன்லால், விவேக் ஓபராய், மன்சூர் அலி கான், டோவினோ தாமஸ் போன்ற பல முக்கியமான நடிகர்கள் நடித்திருந்தனர்.
அந்தவகையில் இப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘எம்புரான்’, இன்னும் அதிகமான ஆக்சன், த்ரில்லர் மற்றும் அரசியல் பின்னணியில் அமைந்த கதையாக திரையரங்குகளில் வரவுள்ளது. இதன் ட்ரெய்லர் வெளிவந்ததுமே ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியதுடன் படத்தினை திரையில் பார்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Listen News!