• May 21 2024

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த அமலாபால்-ஏன் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் மணிரத்னம். இவருடைய இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தப் படமானது செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக அனைத்து திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விக்ரம் ,கார்த்தி, ஜெயம் ரவி ,ஜெயராம் ,ஐஸ்வர்யா ராய் ,த்ரிஷா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.



சமீபத்தில் ரிலீஸ் ஆன PS 1 ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நிராகரித்ததாக அமலா பால் தெரிவித்து இருக்கிறார்.

பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க அமலா பாலை அணுகி இருக்கிறார் மணிரத்னம். ஆனால் அவர் முடியாதென மறுத்துவிட்டாராம். அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் அமலா பால்.



"நான் மணி சாரின் பெரிய ரசிகை. மேலும் அவருடன் ஒரு ஆடிஷனுக்கு சென்று இருக்கிறேன், ஆனால் அந்த முறை நான் தேர்வாகவில்லை. அதற்கு பிறகு 2021ல் அதே ப்ரொஜெக்ட்டுக்கு என்னை அணுகினார்."

"ஆனால் அதில் நடிக்க mental stateல் நான் இல்லை, அதனால் முடியாது என சொல்லவிட்டேன். அதற்காக இப்போது வருத்தப்படுகிறேனா என கேட்டால் 'இல்லை' என்று தான் சொல்வேன்" என அமலா பால் தெரிவித்து இருக்கிறார்.




Advertisement

Advertisement